டுவின்டெக் அகாடமி வணிக மேலாண்மை தீர்வு மையம்
ஆரம்பிக்கப்பட்டது
(TwinTech Academy Business
Management Solutions)
இந்தியாமில் மருத்துவமும் அது சார்ந்த இதர துறைகளில்
நல்ல வளர்ச்சிக்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. இதைக் கருத்தில்கொண்டு சென்னையை
மையமாகவைத்து ஆரம்பிக்கப்பட்டது தான்
டுவின்டெக் அகாடமி வணிக மேலாண்மை தீர்வு மையம்.
இந்தியாவில் மட்டுமன்றி உலக அளவில்
கண்மருத்துவத்துறையில் சிறந்துவிளங்கும் சங்கர நேத்ராலயாவில் 25 ஆண்டுகள் மற்றும் கார்ப்பரேட் மருத்துவம் பணிபுரிந்த
அனுபவம் உடைய திரு.. அ மகாலிங்கம்
அவர்களின் சீரிய எண்ணத்தில் பிறந்ததுதான் இந்த மையம்.
மருத்துவ மேலாண்மை, கார்ப்பரேட் மருத்துவம் ,மருத்துவ
பயிற்சி மற்றும் வளர்ச்சி, மருத்துவ சுற்றுலா, மனித வள மேம்பாடு மற்றும் அது
தொடர்பான பயிற்சி, சட்டம் மற்றும் வேலைவாய்ப்பு பணிகள் மற்றும் நிகழ்ச்சி மேலாண்மை
போன்ற பணிகளில் கவனம் செலுத்த இம்மையம் திட்டமிட்டிருக்கிறது. தொடர்புடைய
துறைகளில் போதிய அனுபவம் வாய்ந்த பயிற்சிபெற்ற சிறந்த வல்லுநர்களைக் கொண்டுள்ளது
இம்மையத்தின் தனிச்சிறப்பு.
இந்த டுவின்டெக் அகாடெமியின் நிறுவனரான திரு அ மகாலிங்கம்
கல்வி மற்றும் மருத்துவத் துறைகளில் தேசிய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவில் ‘மகாலி’
என்று
அன்புடன் அழைக்கப்படுகிறார். 25 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவ மேலாண்மை பெற்ற சிறந்த அனுபவத்தை முதலீடாகக் கொண்டு
சிறப்பாக வழிநடத்தத் திட்டமிட்டிருக்கிறார் திரு. மகாலி
இக்னோ, லிபா, பிட்ஸ்பிலானி போன்ற தலைசிறந்த கல்வி
நிறுவனங்களில் மருத்துவமேலாண்மை , பயிற்சி மற்றும் மனிதவளமேம்பாடுகளில் பெற்ற
அனுபவத்தால் இன்று மருத்துவ மேலாண்மையாளராகவும் சிறந்த கல்வியாளராகவும்
விளங்கிறார் திரு.மகாலி.
மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி, பயிற்சி மற்றும்
ஆராய்ச்சிக்கான் இந்த்யக்கழகத்தின் சென்னை மண்டலத்தின் உறுப்பினர், அறிவியல்
மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கான காமன்வெல்த் அமைப்பின் சென்னை அமைப்புக்கான
இயக்குநர் போன்ற பொறுப்புக்களை வகித்து வருகிறார். MBA மற்றும்
மருத்துவ மேலாண்மை தொடர்பான படிப்புகளுக்கு மட்டுமல்லாமல் தமிழ்நாடு எம்.ஜி.ஆர்
பல்கலைகழகத்தின்கீழ் நட்த்தப்படும் மருத்துவம் தொடர்பான கல்வி பயிலும் பலருக்கு
சிறந்த அனுபவம் வாய்ந்த ஆசிரியராகவும் வழிகாட்டியாகவும் செயல்பட்டு வருகிறார்.
மேலும் விவரங்களுக்கு திரு அ. மகாலிங்கம் தொலைபேசி எண் : 97104 85295 அல்லது 2525india@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரியையோ தொடர்பு கொள்ளலாம்.
அ. மகாலிங்கம்
இயக்குநர்
டுவின்டெக் அகாடமி வணிக மேலாண்மை
தீர்வு மையம்
தொலைபேசி எண் : 97104 85295 / 98405 23560