திருமண
விழாவில் கண் தானம் மற்றும்
விழிப்புணர்வு உறுதிமொழி
கண் மருத்துவத்தின் வல்லுனரும் கல்வியாளரும் சமூக சேவகர் மருத்துவத்துறை ஜாம்பவான் மதிப்பிற்குரிய டாக்டர் அ.மகாலிங்கம் தனது மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை பார்வை இழப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியாக செய்திருந்தது அனைவரும் நெகிழ்ச்சியும் வியப்பும் அடைந்தனர்
கண் சிகிச்சையின் மிகச்சிறந்த வல்லுநரும் இந்திய
மருத்துவ மேலாண்மை வல்லுனர்களின் கூட்டமைப்பு சங்கங்களின் பொதுச் செயலாளராக இருக்கும் டாக்டர் அ மகாலிங்கம் அவர்களின புதல்வி திரு நிறை செல்வி எம். மானசி (கண் பரிசோதனை செய்வதில் முதுநிலை பட்டம் ) - விக்னேஷ் அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி 08 .09 .2022 வியாழக்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில் கண் மருத்துவத்தின் வல்லுனர் டாக்டர் அ மகாலிங்கம் அவர்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியுடன் கண்ணை பாதுகாப்பது பற்றியும் அதன் சிறப்பு அம்சங்கள் மற்றும் பார்வை இழப்பை தடுப்பது குறித்த அவருடைய பேச்சும் வரவேற்க வைத்திருந்த பதாகைகளுடன் அதற்கான விழிப்புணர்வு வாசகங்களும் மற்றும் கண் தானத்தின் சிறப்பு அம்சங்களை பற்றியும் அதற்கான உறுதி மொழி எடுக்க வைத்தது ஆசிரியப்பட வைத்தது.
இந்த மருத்துவத்துறையில் அவர் வைத்திருக்கும் ஆர்வத்தையும் இந்த மக்களின் மேல் வைத்திருக்கும் அன்பாலும் பார்வை இழப்பை முற்றிலும் தவிர்க்கும் முன்னோடியாக திகழ்ந்து கொண்டிருக்கும் கண் மருத்துவ வல்லுநர் அ மகாலிங்கம் அவர்கள் செய்திருந்தது மருத்துவத்துறைக்கும் மற்றவர்களுக்கும் முன் உதாரணமாக இருந்தது என்பதை அனைவரும் மகிழ்ந்து பாராட்டி சந்தோசத்துடன் வாழ்த்தினார்
மேலும் தொடர்ந்து நமது மருத்துவ வல்லுநர் அவர்கள் பத்திரிகைகளுக்கும் மிகச் சிறந்த முறையில் அதற்கான கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கின்றார் கண் மருத்துவத்தின் மகத்துவத்தைப் பற்றியும் முக்கியத்துவத்தையும் பற்றியும் கண் தானத்தை பற்றியும் தொலைக்காட்சியின் வாயிலாகவும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றார்.
ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் செப்டம்பர் 8 ஆம் தேதி வரை பார்வை இழப்பு தடுப்பின் முகாம்களை ஒவ்வொரு வருடமும் மிகச் சிறப்பாக செய்து எண்ணற்றவர்களை கண் தானம் செய்ய வைத்துக் கொண்டிருக்கிறார் இதன் மூலம் கண் பார்வையற்றவர்கள் கண் ஒளி பெற்று மகிழ்ச்சியடைந்து வாழ்த்தி கொண்டிருக்கின்றனர்.
அ மகாலிங்கம் அவர்களின் செயல்களும் நல்ல நோக்கங்களும் செயல் திட்டங்களும் தொடர்ந்து இயங்கி வெற்றி அடைந்து கொண்டிருக்கின்றது.
அ மகாலிங்கம் அவர்களை வாட்ஸாப்ப் 97104 85295 / மின்னஞ்சல் : mahali@mahali.in மூலம் தொடர்பு கொள்ளலாம்