Thursday, 3 November 2016

மருத்துவமனை / சுகாதார நிர்வாகம் சான்றிதழ் படிப்பு டுவின்டெக் கல்வி அறக்கட்டளை நிறுவனம்,சென்னை



பத்திரிகை செய்திக்குறிப்பு வெளியீடு
டுவின்டெக் கல்வி அறக்கட்டளை நிறுவனம்
வார இறுதி நாட்களில்
மருத்துவமனை / சுகாதார நிர்வாகம் சான்றிதழ் படிப்பு
 (Healthcare Administration course) 
                படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
பயிற்சி நடைபெறும் இடம்: மருத்துவ மரபியல் மையம்(Centre for Medical Genetics), தமிழ்நாடு அறக்கட்டளை, எண் 27, டெய்லர் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை 600 010(சின்மயா வித்யாலயா பள்ளி அருகே)
சென்னை டுவின்டெக் கல்வி அறக்கட்டளை நிறுவனம், மருத்துவமனை / சுகாதார நிர்வாகம் சான்றிதழ் படிப்பினை ( சர்ட்டிபிகேட் கோர்ஸ் இன் ஹாஸ்பிடல் நிர்வாகம் ) தொடர்ந்து வழங்கி வருகிறது.
இந்த படிப்பு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவம் சார்ந்த நிறுவனங்களில் நிர்வாகம் மற்றும் மேலாண்மை துறைகளில் பணியாற்றும் இள நிலை மற்றும் மத்திய நிலை ஊழியர்களின் வசதியை கருத்திற்கொண்டு 12 வார இறுதி நாட்களை பயிற்சிக்காலமாக (சனிக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை) அமைத்து வகுப்புகளாக வழங்குகிறது.
இந்த படிப்பில் கீழ்க்கண்ட சிறப்பு வகுப்புகள் அமைந்துள்ளன; கம்யூனிகேஷன் திறன், சுகாதார சேவையில் மனித வள மேலாண்மை, மருத்துவமனைகளுக்கான தர அங்கீகார முறைகள், தொடர் விநியோக மேலாண்மை எனப்படும் சப்ளை செயின் மேனேஜ்மெண்ட், சுகாதாரத் துறையில் தகவல் தொடர்பு வசதிகள், சுகாதார பாதுகாப்பு சட்டங்கள்,ஹெல்த் இன்ஸ்யூரன்ஸ் மற்றும் க்ளெய்ம் மேனேஜ்மெண்ட், முழுத்தர நிர்வாகம், பயிற்சி மற்றும் வளர்ச்சி தேவைகள், நிதி நிர்வாகம் மற்றும் மருத்துவமனை விஜயம் உள்ளிட்ட சிறப்பு அம்சங்களை உள்ளடக்கியதாக இந்த படிப்பு அமைந்துள்ளது.நிச்சயமாக அவர்கள் நன்கு தகவலறிந்த முடிவுகளை எடுக்க உதவும் மத்திய நிலை மற்றும் மூத்த மேலாளர்கள் நிர்வாக சிக்கல்கள் மற்றும் கருத்துக்கள் ஒட்டுமொத்த புரிந்து அதிகரிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த படிப்பு மருத்துவமனைகள் மற்றும் சுகாதாரம் சார்ந்த துறைகளில் பணியாற்றும் இள நிலை மற்றும் மத்திய நிலை அலுவலர்களின் திறமையை குறிப்பாக நிர்வாக சிக்கல்கள் மற்றும் மேலாண்மை கருத்துக்களை புரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
டுவின்டெக் கல்வி அறக்கட்டளை மருத்துவமனை மேலாண்மை சான்றிதழ் படிப்பின் வகுப்புகள்  டிசம்பர் 3, 2016  (சனிக்கிழமை) முதல் தொடங்குகிறது.
பயிற்சிக்கு பதிவு படிவத்தை நிரப்பி சமர்ப்பிக்க கடைசி நாள் : 15.11.2016
மேலும் விவரங்களுக்கு  : திரு . மகாலிங்கம் தொலைபேசி எண் : 97104 85295 / அல்லது mahali@mahali.in  என்கிற மின்னஞ்சல் முகவரி / இணைய முகவரி: www.chennaitwintech.com தொடர்பு கொள்ளலாம்.

இயக்குநர்  - டுவின்டெக் கல்வி அறக்கட்டளை நிறுவனம்,சென்னை
*சான்றிதழ்*
        ~~~~~~~~~~
தகைமைசால் செல்வர் திருவாளர் உயர்திரு .
*A. மஹாலிங்கம் ,
டுவின்டெக் கல்வி அறக்கட்டளை, சென்னை
அவர்களுக்கு மனமகிழ்ந்து *நற்சான்றிதழ்* அளிப்பதில்  மகிழ்வும் , பெருமிதமும் கொள்கிறேன் .
பன்முகத் தன்மை பாராட்டும் நல்வகையில் பெற்றுள்ளவர் திரு.A. *மஹாலிங்கம்* அவர்கள்.பட்டியலிட்டு காட்டும்படி ,
நான் அறிந்த அவர் ஒரு
1 *சிறந்த படிப்பாளர்* ;   
2 *கூர்த்த மதியாளர்* ;
3  *நல்ல சிந்தனையாளர்*
4 *அயராத  உழைப்பாளர்* ;
5 *நெடிய அனுபவத்தார்* ;
6 *தேர்ந்த கல்வியாளர்* ; 
7 *விடாமுயற்சிக்காரர்* ;
8 *சீரிய நிர்வாகத்திறத்தார்* ;
9 *நிறைந்த நேர்மைக்காரர்* ;
10 *உயர்ந்த பண்பாளர்* ;
11 *கனிந்த அன்பானவர்* ;
12 *எளிமையின் இடமானவர்* ;
13 *ஒருங்கிணைப்பு , ஊக்கம்* *விரைவு* , *செயலாக்கம்* , *இணக்கம் , உறுதி , குழு மனப்பான்மை கொண்ட வல்லவர்* .
இத்தகு மேன்மையாளர் *மருத்துவ சேவையில் நிர்வாகம் மற்றும் மேலாண்மை* சார்ந்த துறையில் , தனது மிக நீண்ட ( *25* ) *இருபத்திஐந்து* ஆண்டுகால அனுபவத்தை துணைக் கொண்டவர் .
அவர் முன்னின்று  ஆசிரியராய் , ஒருங்கிணைப்பாளராய் , நன்கு நடாத்திய வகுப்பில் பயின்ற முன்னாள் மாணவர் என்ற வகையில் இந்த நற்சான்றிதழ் வரைந்தளிப்பதை நல் வாய்ப்பாக கருதுகிறேன் .
அவர் மூளையில் கருவான குழந்தை *TWIN TECH ACADEMY *  செழித்து , தழைத்து , ஓங்கி வளர்ந்து வெற்றிக்கனிகள் கொய்வது வெள்ளிடை மலையே ! உள்ளங்கை நெல்லிக்கனியே !
ஒப்பம் :
மரு.கிருஷ்ணமூர்த்தி
மருத்துவர் , நுண்கதிர் துறை தலைவர் மற்றும் பேராசிரியர் , செட்டிநாடு மருத்துவ கல்லூரி , கேளம்பாக்கம் , சென்னை

No comments:

Post a Comment