Sunday, 6 August 2017

உயிர் மருத்துவ கழிவு மேலாண்மை குறித்த ஒருநாள் கருத்தரங்கம்: சென்னையில் ஆகஸ்ட் 13-ம் தேதி நடக்கிறது

உயிர் மருத்துவ கழிவு மேலாண்மை குறித்த ஒருநாள் கருத்தரங்கம்: சென்னையில் ஆகஸ்ட் 13-ம் தேதி நடக்கிறது
டுவின்டெக் அகாடமி வணிக மேலாண்மை தீர்வு மையம் உயிர் மருத்துவ கழிவு மேலாண்மை குறித்த ஒருநாள் கருத்தரங்கை சென்னையில் ஆகஸ்ட் 13-ம் தேதி நடத்துகிறது.
இதுகுறித்து டுவின்டெக் அகாடமி வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''மருத்துவமனைகளில் இருந்து ஆபத்தான மருத்துவக் கழிவுகள் அதிக அளவில் வெளியேறுகின்றன. இது பொதுமக்களுக்கும் மருத்துவத்துறை சார்ந்த நிர்வாகத்தினருக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தலாகும். மருத்துவமனைகள் வெளியேற்றும் கழிவுகளினால் மருத்துவத்துறை பணியாளர்களும், சுற்றுப்புறமும், தாவரங்களும் விலங்கினங்களும் அதிக பாதிப்புகளுக்கு உள்ளாகின்றன. இந்நிலையில் மருத்துவக் கழிவுகளை நிர்வகிக்க வசதியாக மருத்துவ மேலாண்மைப் பயிற்சி டுவின்டெக் அகாடமி நடத்தும் கருத்தரங்கில் வழங்கப்படுகிறது. மேலும், உயிர் மருத்துவக் கழிவுகளினால் ஏற்படும் நச்சின் தீவிரத்தைக் குறைப்பது குறித்த பயனுள்ள தகவல்களையும் கருத்தரங்கில் பெற முடியும்.
அரசு மற்றும், தனியார் மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களைச் சார்ந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு இந்த கருத்தரங்கப் பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்தப் பயிற்சியில் கலந்துகொள்பவர்களுக்கு தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகத்தின் CME 15 அங்கீகாரப் புள்ளிகள் வழங்கப்படும்.
சென்னை சூளைமேடு பகுதியில் நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள இந்திய பயிற்சி மற்றும் வளர்ச்சி கழகத்தில் (ஐஎஸ்டிடி) ஆகஸ்ட் 13-ம் தேதி கருத்தரங்கம் நடைபெற உள்ளது.
மேலும் விவரங்களுக்கு: அ.மகாலிங்கம், நிர்வாக இயக்குநர், டுவின்டெக் அகாடமி, செல்பேசி: 97104 85295, மின் அஞ்சல்: mahali@chennaitwintech.com இணையதளம்: www.chennaitwintech.com என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment