Saturday, 18 April 2020

கிராம சுகாதார செவிலியர் திருமதி ச.ஜெயலட்சுமி அவர்களின் மனிதாபமான உதவி மற்றும் ஆலோசனைகள் பலரும் பாராட்டும்படியாக இருந்தது


கொரோனா வைரஸ் தொற்று ஊரடங்கு காலத்தில் ஆவடியை அடுத்த வெள்ளானுர் கிராம சுகாதார செவிலியர் திருமதி ச.ஜெயலட்சுமி அவர்களின் மனிதாபமான உதவி மற்றும் ஆலோசனைகள் பலரும் பாராட்டும்படியாக இருந்தது.

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் கிராம பெண்களுக்கும் ஒரு தொடர்பு பாலமாக உள்ளர்வர்கள் தான் கிராம சுகாதார செவிலியர்கள். தனது கிராம பெண்கள் கருவுற்றது முதல்  குழந்தை பேறு  , பின்னர் தடுப்பூசி , தொடர் கவனிப்பு, தடுப்பூசி மற்றும் பல தாய்சேய் நல திட்டங்களை செயல்படுத்தும் மருத்துவ  காலாட் படைக்கலாம் படை போன்று  இருப்பவர்களும் இவர்களே.

மற்றும் தங்கள் பகுதியில் உள்ள கருவுற்ற பெண்களின் ஊட்டச்சத்து, உணவுமுறை அறிவுரையை கூறி , பேறுகாலத்தில் இரத்த சோகை வராமலும் பார்த்துக்கொள்ளுவதும் இவர்களது பணிகளில் முக்கியமானது.

இப்போது உள்ள கொரோனா - 19  ஊரடங்கு காலகட்டத்தில் தங்கள் பகுதில் உள்ள கருவுற்ற ஏழை கும்பத்தை சார்ந்த தாய்மார்கள் தங்களின் குடும்ப தினசரி மற்றும் நிலையான வருமானம் இல்லாதபோது , அவர்கள் சாப்பாட்டிற்கே வழியில்லாமல் இருப்பதை  தனது கொரோன கணக்கெடுப்பின் பொது அறிந்த இந்த செவிலியர் மற்றும் இவரின் கணவரின் உதவியுடன் தங்களினால் முடிந்தவரை சில குடும்பங்களுக்கு உதவலாம் என முடிவு செய்து அத்தியாவசிய தேவைகளான அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் வழங்கினார், அத்துடன் கர்ப்பிணிகள் இந்தக் காலத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தேவையான ஆலோசனைகளையும் அவர்களுக்கு வழங்கினார்கள். கொள்ளுமேடு, வெள்ளானுர் மற்றும் கன்னியம்மன் நகர் கிராம் மக்களுக்கு இந்த உதவிகள் அவர்களின் வீடுகளுக்கே நேரடியாக வழங்கினார்.

கர்ப்பிணிகள் இந்தக் காலத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தேவையான ஆலோசனைகளையும் பெற  97102 44215 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறினார் இந்த செவிலியர் திருமதி ச.ஜெயலட்சுமி.

No comments:

Post a Comment